தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் வெற்றி ஆய்வுக்குரியது என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:
மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றது என்பது ஆய்வுக்குரிய விஷயம்.
அந்தத் தொகுதியில் பணம் தாராளமாக விநியோகிக்கப்பட்டதாகவும், தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்குகளில் முரண்பாடு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
எனவே, இவை அனைத்தையும் ஆய்வுக்குட்படுத்துவது என்பதில் தவறு எதுவுமில்லை என்பதே எனது கருத்து என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


