மோடி பதவியேற்பு விழாவுக்கு திமுகவிற்கு அழைப்பெல்லாம் இல்லை: டி.ஆர்.பாலு பளீர் 

பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க திமுகவிற்கு அழைப்பு ஏதும் வரவில்லை என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
மோடி பதவியேற்பு விழாவுக்கு திமுகவிற்கு அழைப்பெல்லாம் இல்லை: டி.ஆர்.பாலு பளீர் 

சென்னை: பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க திமுகவிற்கு அழைப்பு ஏதும் வரவில்லை என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இதையடுத்து தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும்  விழா வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. தில்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க எட்டு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்திய அளவில் பல்வேறு முக்கியமான தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க திமுகவிற்கு அழைப்பு ஏதும் வரவில்லை என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று சென்னை விமான நிலையத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக எம்.பி. டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு திமுகவிற்கு அழைப்பு வந்ததாக கூறப்படும் செய்தி உறுதிப்படுத்தப்படாத ஒன்று. அந்த நிகழ்வில் பங்கேற்க திமுகவிற்கு எந்தவொரு அழைப்பும் வரவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதேசமயம், 'அழைப்பு வந்தால் செல்வீர்களா?' என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது குறித்து தலைமை தான் முடிவு எடுக்கும் என்று அவர் பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com