பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டர் சட்டம் ரத்து

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலரை ஒரு கும்பல் பாலியல் கொடுமை செய்து, அதனை விடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்து வந்தது. 

News image
Updated On :1 நவம்பர் 2019, 8:05 am

DIN

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள் உள்ளிட்ட பலரை ஒரு கும்பல் பாலியல் கொடுமை செய்து, அதனை விடியோ படம் எடுத்து மிரட்டிப் பணம் பறித்து வந்தது. இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. 

கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழக போலீஸார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்பட 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. 

இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், இந்த வழக்கில் மணி என்னும் மணிவண்ணனை கைது செய்தனர்.

இந்நிலையில், திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இருவரின் தாயார் தாக்கல் செய்த வழக்குகளின் அடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில், குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.