திண்டுக்கல்லில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 பைசாவுக்கு ½ பிளேட் சிக்கன் பிரியாணி என அறிவிக்கப்பட்டது. 100 நபர்களுக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் ஏராளமானோர் பழைய 5 பைசா நாணயத்துடன் குவிந்தனர்.
இதே போல திண்டுக்கல்லில் உள்ள ஒரு ரெடிமேட் நிறுவனம் 10 பைசா கொண்டு வரும் முதல் 200 நபர்களுக்கு டி-சர்ட் வழங்கப்படும் என அறிவித்தது. இதனையடுத்து இன்று காலை முதல் ஏராளமானோர் 10 பைசா நாணயத்துடன் நீண்ட வரிசையில் நின்றனர்.
200 நபர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டது. இருந்த போதும் டோக்கன் இல்லாத நபர்களும் அங்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். பழைய நாணயங்களை சேமித்து வைக்கும் பழக்கம் இருக்க வேண்டும். பழமையை ஒரு போதும் மறக்க கூடாது என்பதை உணர்த்தும் வகையில் இது போன்ற பழைய 10 பைசா நாணயத்தை கொண்டு வருபவர்களுக்கு டி-சர்ட் வழங்கும் அறிவிப்பை வெளியிட்டதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.
குறுகலான அந்த தெருவில் பொதுமக்கள் அதிக அளவு திரண்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

இன்றைய ராசி பலன்கள் (24 ஏப்ரல் 2026) மேஷம் - மீனம்! பொறுப்புகள் கூடும் இந்த ராசிக்கு!

அக்னிப் பசி!

ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற விவசாயி சோலாா் மின்சாரம் பாய்ந்து பலி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


