பாகிஸ்தானின் ஐஎஸ் அமைப்பிடம் இருந்து பணம் பெறும் பாஜக: காங்கிரஸ் தலைவரின் பேச்சால் சர்ச்சை 

பாகிஸ்தானின் ஐஎஸ் அமைப்பிடம் இருந்து பணம் பெறும் பாஜக: காங்கிரஸ் தலைவரின் பேச்சால் சர்ச்சை 

பாகிஸ்தானின் ஐஎஸ் அமைப்பிடம் இருந்து பாஜக பணம் பெறுகிறது என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
Published on

புது தில்லி: பாகிஸ்தானின் ஐஎஸ் அமைப்பிடம் இருந்து பாஜக பணம் பெறுகிறது என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

மத்தியப் பிரதேசம் சட்னா மாவட்டத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு நிதி திரட்டியதாக கடந்த புதன்கிழமையன்று ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் பஜ்ரங் தளம் அமைப்பின் தலைவர் பல்ராம் சிங். பஜ்ரங் தளம் அமைப்பின் தலைவர் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்குநிதி திரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளது மத்தியப் பிரதேசத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பாரதிய ஜனதா கட்சியின் 'யுவ மோர்சா' அமைப்பின் தலைவர் துருவ் சக்சேனாவும் இதுபோன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், " பஜ்ரங் தளம், பாஜக ஆகிய கட்சிகள் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பிடம் இருந்து பணம் பெறுகின்றன. இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் முஸ்லிம்களை விட முஸ்லிம்கள் அல்லாதவர்கள்தான் ஐஎஸ்ஐக்கு உளவு சொல்கிறார்கள் என்பது தெரிகிறது" என்று தெரிவித்தார்.

திக்விஜய் சிங்கின் இந்தக் கருத்துக்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாஜக தேசியத் துணைத் தலைவரும், முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான், " செய்தியில் இடம் பெறவேண்டும் என்ற பரபரப்பிற்காகவே திக்விஜய் சிங் இப்படிப் பேசுகிறார். திக்விஜய் சிங்கும், அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் களும்தான் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்' என்று அவர் பதிலுக்கு குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com