ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

கனிமொழி வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்த வழக்கில் கனிமொழி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :5 செப்டம்பர் 2019, 5:40 am

DIN

கனிமொழி வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்த வழக்கில் கனிமொழி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜனும் போட்டியிட்டனர். 

அதில், கனிமொழி 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் ஏராளமான குறைபாடுகள் இருந்ததாகவும், எனவே, அவர் பெற்ற வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை மேலும் 2 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.