ஆனால், நரேந்திர மோடி தமக்கு இருக்கிற சொற்பொழிவு ஆற்றலினால் முழுப்பூசணிக்காயை சோற்றில் மூடி மறைப்பதைப் போல வேதனைகளின் பட்டியலுக்கு பதிலாக சாதனைகளின் பட்டியலை அறிவித்து வருகிறார். மோடி அறிவித்திருப்பதோ சாதனைகளின் பட்டியல். ஆனால், நாட்டு மக்கள் அனுபவிப்பதோ வேதனைகளின் பட்டியல். அதல பாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிற இந்திய பொருளாதாரத்தை சரிகட்டுவதற்கு பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் படுதோல்வியடைந்திருக்கிறார்கள். அந்த தோல்வியை மூடி மறைப்பதற்கு எத்தகைய கோயபல்ஸ் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அதில் பா.ஜ.க.வினர் வெற்றி முடியாது என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.