தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணையை திங்கள் மாலை  அரசுத்தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

News image

பத்தாம் வகுப்பு மாணவர்கள்

Updated On :16 செப்டம்பர் 2019, 4:00 pm

DIN

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணையை திங்கள் மாலை  அரசுத்தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் பத்தாம் வகுப்பு மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப்பாடத்திற்கான இருதாள்கள் ஒரே தாள்களாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.

அதையடுத்து ஏற்கனேவே வெளியிடப்பட்ட 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை மாற்றி, புதிய அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2020 மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது; மே 4ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்

அதன் முழுமையான விபரம் வருமாறு:

மார்ச் 27 - மொழிப்பாடம்

மார்ச் 28 - விருப்பப்பாடம்

மார்ச் 31 - ஆங்கிலம்

ஏப்.3 - சமூக அறிவியல்

ஏப். 7 - அறிவியல்

ஏப். 13 - கணிதம்

* மே 4ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.