வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்புவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை: திமுக எச்சரிக்கை 

தி.மு.கழகத்தின் சார்பில் பொய்ச் செய்திகளை வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பும் விஷமிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்புவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை: திமுக எச்சரிக்கை 

சென்னை: தி.மு.கழகத்தின் சார்பில் பொய்ச் செய்திகளை வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பும் விஷமிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக திமுகவின் அமைப்புச் செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி,  எம்.பி., திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரோ அல்லது தலைமைக் கழகமோ எவ்வித அறிவிப்பும் - ஆர்ப்பாட்டமும் - போராட்டமும்  அறிவிக்காத நிலையில்,  தி.மு.கழகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் - அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், சமூகவலைதளங்களில் ஒன்றான "வாட்ஸ்அப்"-பில் தன்னிச்சையாக வேண்டுமென்றே பொய்ச் செய்தி ஒன்றினை உலாவிட்டு வருகின்றனர் சில விஷமிகள்.

தி.மு.கழகத்தின் வளர்ச்சியையும் - எழுச்சியையும் கண்டு பொறாமையின் காரணமாகவும், காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், தமிழக மக்களிடையே அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ்அப்-பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரில் பொய்ச்செய்தினை வெளியிட்டவர்மீது நடவடிக்கை எடுத்திட காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், இவ்வாறு பொய்ச் செய்தியினை வதந்தியாக பரப்புவர்மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் தி.மு.கழகத்தின் சார்பில் எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com