நாட்டின் ஒற்றுமை மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல்: இந்திய கம்யூ கண்டனம் 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டிருப்பது, நாட்டின் ஒற்றுமை மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...
நாட்டின் ஒற்றுமை மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல்: இந்திய கம்யூ கண்டனம் 

சென்னை: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டிருப்பது, நாட்டின் ஒற்றுமை மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையி கூறியிருப்பதாவது:

அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு-370-ன் மூலம் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மோடியின் பாஜக மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இத்துடன் ஜம்மு -  காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஒன்றியப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்களின் நன்மதிப்பை பெற்ற அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  அமர்நாத் யாத்திரையை பாதியில் முடித்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, அவைகள் ராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளது.

நாட்டின் ஒற்றுமை கருதி அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு-370-ன் மூலம் ஆங்கில ஆட்சியின் பிளவுச் சதி முறியடிக்கப்பட்டு, இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் பதட்டம் நிலவி வரும் சூழ்நிலையில், அரசியல் தீர்வுக்காண வழிமுறைகள் உருவாக்கப்படாமல், அரசியல் அமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து, மாநிலத்தை பிரித்திருப்பது நாட்டின் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு குற்றம் சாட்டுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com