சத்துணவு மையங்களுக்கு அழுகிய முட்டைகள் விநியோகம்: அதிகாரிகள் ஆய்வு 

நாமக்கல் மாவட்டத்தில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு அழுகிய முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
சத்துணவு மையங்களுக்கு அழுகிய முட்டைகள் விநியோகம்: அதிகாரிகள் ஆய்வு 

நாமக்கல் மாவட்டத்தில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு அழுகிய முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
 தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் முட்டை சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியருக்கு, வாரந்தோறும் ஐந்து முட்டைகள் வீதம் வழங்கப்படுகிறது. இதற்காக 2.80 கோடி முட்டை வாரத்துக்கு மூன்று முறை சப்ளை
 செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பிய முட்டைகளில், பெரும்பாலான முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகவும், தண்ணீரில் போட்டால் மிதப்பதாகவும் புகார் எழுந்தது. இத் தகவல் மாணவர்களின் பெற்றோர்களை அதிர்ச்சியடைய செய்தது. இதுதொடர்பாக, சத்துணவுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும், அழுகிய முட்டைகளுக்கு பதில், மறுநாள் வழங்குவதற்காக இருப்பு வைத்த முட்டைகளை மாணவர்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தினர். முட்டைகள் மையங்களில் இல்லாதவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. மோகனுôர், பரமத்தி, கபிலர்மலை ஆகிய ஒன்றியங்களில் அழுகிய முட்டைகள் சப்ளை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஏ.மாலா மற்றும் அங்கன்வாடி அதிகாரிகள், சத்துணவு மையங்களிலும் முட்டைகள் குறித்து புதன்கிழமை ஆய்வு நடத்தினர்.
 அமைப்பாளர்கள், சமையலர்களிடம் முட்டையை சரிபார்த்து வேக வைத்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com