பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் போராட்டம் வாபஸ் இல்லை: ஜாக்டோ ஜியோ உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டம் 

முதல்வர் பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் போராட்டம் வாபஸ் கிடையாது என்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்
பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் போராட்டம் வாபஸ் இல்லை: ஜாக்டோ ஜியோ உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டம் 

சென்னை: முதல்வர் பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் போராட்டம் வாபஸ் கிடையாது என்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்

கடந்த 22-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் ஆசிரியர்கள்கள் போராட்டம் தொடர்பான பொதுநல வழக்கு ஒன்று திங்களன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில்; விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருபாகரன் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். அவர் கூறியதாவது:

ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்தால் அடுத்த தலைமுறை பாதிக்கப்படும். நீங்கள் போராட்டம் நடத்துவதற்கு தேர்வுகாலம் தான் சரியான நேரமா ? மாணவர்கள் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறையில்லையா?  சாலையில் இறங்கி போராடுவது ஆசிரியர்களுக்கு அழகல்ல.

மற்ற மாநிலங்களில் ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறதா? தனியார் பள்ளியில் பயிலும், அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு பாடம் எடுக்கக்கூடாது என கூறினால் ஏற்பீர்களா?

உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றாலும் வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  ஆசிரியர்களை வலியுறுத்துகிறேன்.

தேர்வு நேரம் என்பதைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மட்டுமாவது பணிக்கு திரும்ப முடியுமா? இதுகுறித்து நாளை மதியம் பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து வழக்கினை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் முதல்வர் பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் போராட்டம் வாபஸ் கிடையாது என்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்

இந்த வழக்கானது செவ்வாய் மதியம் விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் கூறியதாவது:

ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகளுடன் முன்னதாக மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அவர்களுடன் முதலவர் பேச்சுவார்த்தை நடத்த மாட்டார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களில் ஏறக்குறைய 90% பேர் பணிக்குத் திரும்பி விட்டனர். அத்துடன் ரூ. 10 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்ற சுமார் 10 லட்சம் பேர் இதுவரை விண்ணப்பி த்துள்ளனர்.

இவ்வாறு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் போராட்டம் வாபஸ் கிடையாது என்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் வழக்கறிஞர் பின்னர்  உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com