நான் மாட்டமாட்டேன்: ரஜினி சொன்ன அழுத்தமான ஸ்டேட்மென்ட்.. ஏன்? எதற்கு?

எனக்கு பாஜக சாயம் பூச முயற்சி நடக்கிறது; ஆனால் நான் மாட்டமாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்


சென்னை: எனக்கு பாஜக சாயம் பூச முயற்சி நடக்கிறது; ஆனால் நான் மாட்டமாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலுக்கு வருவேன் என்று ரஜினிகாந்த் கூறிய பிறகு, அது தொடர்பான பல்வேறு ஆரூடங்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது. அதில் ஒன்றுதான், அவர் பாஜகவில் இணைவார் என்பது.

அது குறித்து ரஜினி இதுவரை வாய்திறக்காமல் இருந்து வந்த நிலையில், இன்று அனைவரும் வரவேற்கும் வகையில் தனது மௌனத்தைக் கலைத்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்திடம், பாஜக தலைவராக நீங்கள் வரவுள்ளீர்கள் என செய்திகள் வெளியாகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு மிக அழுத்தம் திருத்தமான பதிலை ரஜினி பதிவு செய்துள்ளார்.  என்னை பாரதிய ஜனதா உறுப்பினராக நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. திருவள்ளுவருக்கு காவி நிறத்தை பூசியது போல் எனக்கும் காவி பூச முயற்சி நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. ஆனால் நான் மாட்டமாட்டேன் என்று கூறி அவரது ஸ்டைலில் சிரித்தார்.

மேலும், திருவள்ளுவர் போன்ற ஞானிகள் மதம் மற்றும் ஜாதிக்கு அப்பாற்பட்டவர்கள். திருவள்ளுவர் நாத்திகர் அல்ல, ஆத்திகர், கடவுள் நம்பிக்கைக் கொண்டவர் அவர். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததும், அதை டிவிட்டரில் பதிவிட்டதும் அவர்களது தனிப்பட்ட விருப்பம்.

திருவள்ளுவருக்கும் எனக்கும் பாஜக சாயம் பூச முயற்சி நடக்கிறது. ஆனால் இருவருமே தரப்பிவிடுவோம் என்று கூறினார்.

பாஜகவில் இணைவது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் தொடர்ந்து உங்களிடம் பேசி வருவதாகக் கூறப்படும் செய்திகள் குறித்த கேள்விக்கு, பாஜகவில் இருந்து யாரும் என்னை அழைக்கவில்லை. யாரும் என்னை சந்திக்கவில்லை. பாஜக ஜனதா எனக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை. பாஜகவில் இணைவது போன்ற மாயை ஏற்படுத்தப்படுகிறது என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், பாஜகவின் நிறமான காவியை எனக்கு பூச முயற்சி நடைபெறுகிறது. ஆனால் நான் மட்டமாட்டேன். எனக்கு ஒரு போதும் காவிச் சாயம் பூச முடியாது என்று தெளிவாகக் கூறினார்.

அதோடு, தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com