சுடச்சுட

  

  ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இனி பொதுத்தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 

  By DIN  |   Published on : 13th September 2019 07:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  public exams for 5th & 8th students

  பள்ளி மாணவர்கள்

   

  சென்னை: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வி ஆண்டில் இருந்தே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  முன்னதாக இதுதொடர்பான பரிந்துரையினை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியிருந்தது. ஆனால் அதுதொடர்பான முடிவினை மாநில அரசுகள் ஆலோசித்து எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தது.

  இதுதொடர்பாக மாநில அமைச்சரவையினைக் கூட்டி விவாதித்த பின்னர் உரிய முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்பு தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வி ஆண்டில் இருந்தே (2019-2020) பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வி ஆண்டில் இருந்தே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, இந்த முடிவினை அடிப்படையாக வைத்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர்களது தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai