புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!

இன்று அம்பேத்கரின் 129-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதையை செலுத்தினார். 

News image
Updated On :14 ஏப்ரல் 2020, 7:22 am

DIN

இன்று அம்பேத்கரின் 129-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதையை செலுத்தினார்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், 21 நாட்களுக்குப் பிறகு ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலினுடன்,  துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் வந்திருந்தனர். அனைவருமே சமூக இடைவெளியை கடைபிடித்ததுடன் மாஸ்க் அணிந்திருந்தனர். 

மேலும், அம்பேத்கரை நினைவு கூறும் வகையில் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அறிவையும் கல்வியையும் ஆயுதமாக்கி முன்னேற வழிகாட்டிய மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 129வது பிறந்த நாளில் அவரது கொள்கைகளை, இலக்குகளை நினைவுகூர்வோம்.

சமத்துவமும், ஜனநாயகமும் அவரது இரு கண்கள். அவர் காண விரும்பிய இலக்கை அவர் பாதையில் அடைய உறுதியேற்போம்' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.