கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நேரக்கட்டுப்பாடு மே 3ஆம் தேதி வரை தொடரும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் நேரக்கட்டுப்பாடு என்பது மே 3ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :19 ஏப்ரல் 2020, 6:12 am

DIN

தமிழகத்தில் நேரக்கட்டுப்பாடு என்பது மே 3ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வருகிற மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை (ஏப்ரல் 20) முதல் சில தொழில் நிறுவனங்கள் இயங்க தளா்வுகளை அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவுகளை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசித்து அரசுக்கு அறிக்கை அளிக்க நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சிறு, குறுந் தொழில்கள், கட்டுமானப் பணிகளுக்கு தளா்வு அளித்து அவற்றைத் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் நேரக்கட்டுப்பாடு என்பது மே 3ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மளிகை கடைகள் உள்ளிட்டவை மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்து இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.