தூத்துக்குடியில் போல்டன்புரம் பகுதியில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்டு 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 10 பேர் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட போல்டன்புரத்தை சேர்ந்தவர்கள் இதனால் போல்டன்புரத்தை சுற்றியுள்ள மூன்று கிலோமீட்டருக்கு சீல் வைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக அந்த பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் காய்கறி பால் உள்ளிட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டி அப்பகுதிகளை சேர்ந்த பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு உள்ள பகுதியில் திரண்ட மக்கள் அப்போது தங்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு வெளியே அனுமதிக்க வேண்டுமென காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


