அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

உத்தரவை மீறி கடைகள் திறந்தால் சீல் வைக்கப்படும்: சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை

உத்தரவை மீறி கடைகள் திறந்தால் சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கைவிடுத்துள்ளார். 

News image
Updated On :24 ஏப்ரல் 2020, 2:34 pm

DIN

உத்தரவை மீறி கடைகள் திறந்தால் சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கைவிடுத்துள்ளார். 

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 29 வரை நான்கு நாள்களுக்கும் சேலம், திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ஏப். 26 முதல் 28 வரை மூன்று நாள்களுக்கும் முழு  ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் கே.  பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை, காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் அத்தியாவசியப் பணிகள் தவிர வேறு எந்தப் பணிகளுமே அனுமதிக்கப்பட மாட்டாது என்று முதல்வர் கே. பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் உத்தரவை மீறி கடைகள் திறந்தால் சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கைவிடுத்துள்ளார். மேலும் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை சென்னையில் மளிகைக்கடைகள், இறைச்சிக் கடைகள், பேக்கரிகள் இயங்காது என்றும் அனைத்து மண்டலங்களிலும் தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கும், பறக்கும் படைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.