ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மழை எதிரொலி: முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் கன மழை தொடர்வதால், நீர்வரத்து, விநாடிக்கு 1032 கன அடியாக அதிகரித்து வருகிறது.

News image
முல்லைப் பெரியாறு அணை
Updated On :3 ஆகஸ்ட் 2020, 4:53 am

DIN

முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் கன மழை தொடர்வதால், நீர்வரத்து, விநாடிக்கு 1032 கன அடியாக அதிகரித்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாக சாரல் மற்றும் கன மழை பெய்து வருகிறது. பல மாதங்களாக 112 அடி உயரமாக இருந்த நீர்மட்டம் சாரல் மழையால் ஜூலை, 11ல் 113 அடி உயரமாகவும், ஜூலை, 22ல் 114 அடி உயரமாகவும், ஜூலை. 31 ல் 115 அடி உயரத்தையும் எட்டியது.

ஜூலை மாதத்தில் மட்டும் 3 அடி உயரத்தை எட்டியது. இதனால் பல மாதங்களாக நீர் மட்டம் உயராமல் கவலையில் இருந்த பெரியாறு அணைப்பகுதி பொறியாளர்கள், மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சியடந்தனர். இதற்கிடையில் ஞாயிற்றுக் கிழமை அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு 604 கன அடியாக இருந்தது. 

ஒரே நாளில் 428 கன அடி தண்ணீர் அதிகரித்து, திங்கள் கிழமை 1032 கன அடியாக வந்தது. இதனால் நீர் மட்டம் 115.40 அடியாக இருந்தது. திங்கள் கிழமை 115.75 அடியாக உயர்ந்தது. பெரியாறு அணைப்பகுதியில், 31.4 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 22.6 மி.மீ., மழையும் பெய்தது.

இதே நிலை நீடித்தால், திங்கள்கிழமை இரவுக்குள் 116 அடி உயரத்தை எட்டும் என்று அணைப்பகுதி பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.