தூத்துக்குடி தூயபனிமயமாதா பேராலய 10 ஆம் நாள் திருவிழா பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது.
நாட்டின் புகழ்மிக்க கத்தோலிக்க கிறிஸ்தவ பேராலயங்களில் ஒன்றான தூத்துக்குடி புனித பனிமய மாதா ஆலயத்தின் ஆண்டுப்பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம்தேதி நடைபெறும். ஏழுகடல் துறை அடைக்கலத்தாய் என்று தூத்துக்குடி மக்களால் அன்போடு அழைக்கப்படும் பனிமய மாதா பேராலயத்தின் 438 ஆம் ஆண்டுப் பெருவிழா இந்த ஆண்டும் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடியின் திருவிழாவாக கொண்டாடப்படும் பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டுப்பெருவிழா பொதுமக்கள் பங்கேற்பின்றி கடந்த ஜூலை26 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் ஜெபமாலை, மறையுரை மற்றும் திருப்பலி நடைபெற்று வந்த நிலையில் ஆண்டுப் பெருவிழாவின் நிறைவு நாளான புதன்கிழமை கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஆடம்பர கூட்டுத்திரும்பலி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா மறையுரை நிகழ்த்தினார். மறைமாவட்ட முதன்மை குரு, பங்குதந்தைகள் மட்டுமே கலந்து கொண்டனர். திருவிழா நாட்களில் தினந்தோறும் சிறப்பு வழிபாடும், திருப்பலியும் நடைபெற்றது.
பேராலய திருவிழாவின் சிறப்பு திருப்பலி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் உள்ளூர் தொலைக்காட்சியிலும், இணையத்திலும் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
விழாவின் புதன்கிழமை மாலை நடைபெறும் பொன் மகுடம் தரித்த தூயபனிமய மாதாவின் திருவுருவ சப்பரப்பவனி கரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தை பொறுத்தமட்டில் இத்திருவிழாவில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்லாது இந்து மற்றும் இஸ்லாமிய பெருமக்களும் தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பது வழக்கம். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த திருவிழா இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்பின்றி நிறைவடைந்தது சற்று ஏமாற்றத்தை அளித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


