ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கிருஷ்ணகிரியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி பலி

நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்ற 12 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி  பலியான சம்பவம் அப்பகுதிமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :6 ஆகஸ்ட் 2020, 10:33 am

DIN

நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்ற 12 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி  பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ள கெட்டு கிராமத்தை சேர்ந்தவர் காவேரி. இவருக்கு 12 வயது நிரம்பிய ரங்கநாதன் (12) என்ற மகன் உள்ளார். இவர் வியாழக்கிழமை அருகில் உள்ள ஏரியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார்.

ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் நீச்சல் தெரியாத ரங்கநாதன் நீரில் மூழ்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அருகில் இருந்தவர்களை அழைத்து அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ரங்கநாதன் இருசக்கர வாகனம் மூலம் சிகிச்சைக்காக காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ரங்கநாதனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக  உடலை அனுப்பி வைத்தனர். நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்ற சிருவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.