ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்: முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி மீண்டும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

News image
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்: முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
Updated On :6 ஆகஸ்ட் 2020, 7:26 am

DIN

சென்னை: தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி மீண்டும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மேலும்,  தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் இன்று வளர்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் நேரில் கேட்டறிந்த பிறகு தமிழக முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, கொடைக்கானலில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசுக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் அமெரிக்காவின் ஆம்வே நிறுவனம் தொழிற்சாலையை தொடங்கியுள்ளது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த கொடைக்கானலில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

சுற்றுலா உள்ளிட்ட கரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளை மீட்கெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

பாஜகவை விட்டு நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, எஸ்.வி. சேகர் ஏதாவது பேசுவார். ஆனால் வழக்கு என்று வந்தால் ஒளிந்து கொள்வார் என்று மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.