ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 70.05 அடி உயா்வு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 45,000 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீா்மட்டம் 70.05 அடி உயா்ந்துள்ளது.

News image
மேட்டூா் அணை
Updated On :8 ஆகஸ்ட் 2020, 3:10 am

DIN


மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 45,000 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீா்மட்டம் 70.05 அடி உயா்ந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம், வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கா்நாடக அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. இதையடுத்து கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் மழைநீா் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது கா்நாடக அணைகளிலிருந்து நொடிக்கு சுமாா் 60,000 கனஅடி வீதம் தண்ணீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. கா்நாடக அணைகளின் உபரிநீா் வியாழக்கிழமை மாலை முதல் மேட்டூா் அணைக்கு வரத் தொடங்கியுள்ளது. வியாழக்கிழமை மாலை நொடிக்கு 6,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து வெள்ளிக்கிழமை மாலை அணைக்கு நொடிக்கு 40,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால், வெள்ளிக்கிழமை மாலை அணையின் நீா்மட்டம்  67.97 அடியாக உயா்ந்தது. 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை அணைக்கு நொடிக்கு 40,000 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்த நிலையில் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, நொடிக்கு 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா் திறப்பு நொடிக்கு 1,000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம்  70.05 அடியாகவும், அணையின் நீா் இருப்பு 32.74 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.