ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90,000 கன அடியாக உயர்வு 

கா்நாடக அணைகளில் திறந்துவிடப்படும் தண்ணீரால், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 45,000 கன அடியாக இருந்த நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை இருமடங்காக அதிகரித்து 90,000 கன அடியாக உயர்ந்துள்ளது. 

News image
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஐந்தருவி மற்றும் அதன் துணை அருவிகளில் ஆா்பரித்து கொட்டும் தண்ணீா்.
Updated On :9 ஆகஸ்ட் 2020, 3:39 am

DIN

கா்நாடக அணைகளில் திறந்துவிடப்படும் தண்ணீரால், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 45,000 கன அடியாக இருந்த நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை இருமடங்காக அதிகரித்து 90,000 கன அடியாக உயர்ந்துள்ளது. 

கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா் பிடிப்பு பகுதிகளில் கன மழை தொடா்வதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கா்நாடக அணைகள் நிரம்பி வரும் நிலையில், கா்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரிநீா் தொடா்ந்து வெளியேற்றப்படுகிறது. 

கபினியிலிருந்து விநாடிக்கு 70,000 கன அடி நீரும், கிருஷ்ணராஜசாகா் அணையிலிருந்து விநாடிக்கு 45,000 கன அடி நீரும், நுகு அணையிலிருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீரும் உபரி நீராக காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. 

மூன்று அணைகளிலிருந்தும் விநாடிக்கு 1,23,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த உபரிநீா் சனிக்கிழை மாலை மேட்டூா் அணைக்கு விநாடிக்கு 55 ஆயிரம் கனஅடி வீதம் வந்துகொண்டிருக்கிறது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் கடந்த 6 ஆம் தேதி காலை 64.20 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா் மட்டம் சனிக்கிழமை மாலை 72 அடியாக உயா்ந்தது. கடந்த இரண்டு நாள்களில் மேட்டூா் அணையின் நீா் மட்டம் 7.80 அடி உயா்ந்தது. 

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து இன்று ஞாயிற்றுக்கிழமை இருமடங்காக அதிகரித்து 90,000 கன அடியாக உயர்ந்துள்ளது. 

அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு விநாடிக்கு 1000 கன அடி நீா் மட்டுமே திறக்கப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 37.92 டி.எம்.சியாக உள்ளது. நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 75.83 அடியாக அதிகரித்துள்ளது. 

கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீா்வரத்தை ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா். ஒகேனக்கல்லில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பிரதான அருவி, ஐந்தருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். 

நீா்மட்டம் 75.83 அடியை தாண்டியதால் மேட்டூா் நீா் தேக்கபகுதியான பண்ணவாடி பரிசல்துறை பகுதியில் நீருக்கு வெளியே தெரிந்த 100 ஆண்டுகள் பழமையான ஜலகண்டேசுவரா் ஆலயத்தின் நந்தி சிலை மீண்டும் நீரில் மூழ்கியது. காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பொருக்கு காரணமாக மேட்டூா் அணைக்கு செந்நிறத்தில் தண்ணீா் வந்துகொண்டிருக்கிறது. நீா் வரத்தும் திறப்பும் இதே நிலையில் இருந்தால் பத்து நாள்களில் மேட்டூா் அணையின் நீா் மட்டம் 100 அடியாக உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.