ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பழனிசாமியே என்றும் முதல்வர் என்பது கட்சியின் கருத்து அல்ல: ஜெயக்குமார்

பழனிசாமியே என்றும் முதல்வர் என்று ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது அதிமுகவின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

News image
பழனிசாமியே என்றும் முதல்வர் என்பது கட்சியின் கருத்து அல்ல: ஜெயக்குமார்
Updated On :12 ஆகஸ்ட் 2020, 7:38 am

DIN

சென்னை: எடப்பாடி கே. பழனிசாமியே என்றும் முதல்வர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது அதிமுகவின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை காசிமேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், முதல்வர் வேட்பாளர் குறித்து ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பற்றி பொது வெளியில் பேசுவது கட்சியை பலவீனப்படுத்தும். முதல்வர் வேட்பாளர் குறித்து பொது வெளியில் பேசுவது ஆரோக்கியமாக இருக்காது.

முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுகவினர் யாரும் கருத்து கூறாமல் இருப்பது நல்லது. அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என்பது உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும். முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் கூறுவது கட்சியின் கருத்து இல்லை என்று பதிலளித்துள்ளார்.

அதே சமயம், பாஜக தலைமையில்தான் கூட்டணி என்று வி.பி. துரைசாமி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, "பாஜக தலைமையில்தான் தமிழகத்தில் கூட்டணி என்று வி.பி. துரைசாமி கூறியிருப்பது கட்சியின் கருத்து அல்ல, அதன் பாஜக மாநில தலைவர் முருகன் கூறவில்லை. அவ்வாறு, தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி என்று முருகன் கூறினால் அவருக்கு உரிய பதிலை அதிமுக தெரிவிக்கும் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.