ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தமிழக காவலர்கள் 15 பேருக்கு சுதந்திர தின சிறப்பு விருது: முதல்வர் பழனிசாமி

2020-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News image
தமிழக காவலர்கள் 15 பேருக்கு சுதந்திர தின சிறப்பு விருது: முதல்வர் பழனிசாமி
Updated On :14 ஆகஸ்ட் 2020, 7:57 am

DIN

2020 ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு 2020 ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

1. சௌ.டேவிட்சன் தேவாசீர்வாதம்,
கூடுதல் காவல்துறை இயக்குநர்,
தொழில் நுட்பப் பணிகள், சென்னை,
முன்னாள் காவல் ஆணையர், மதுரை மாநகரம்.

2. கி.சங்கர், 
காவல்துறை தலைவர்,
குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை,
சென்னை.

3. ச. சரவணன்,
காவல் துணைஆணையர்,
சட்டம் மற்றும் ஒழுங்கு,
திருநெல்வேலி மாநகரம்.

4. மருத்துவர் ச. தீபா கணிகர், 
காவல் கண்காணிப்பாளர்,
சேலம் மாவட்டம்.

5. ப்பி.ஜெகன்நாத்,
தலைமை காவலர் 19917,
வேலை வாய்ப்பு மோசடி, மத்திய குற்றப்பிரிவு,
சென்னை பெருநகர காவல்,
சென்னை மாநகரம்.

இதே போன்று புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்க்கண்ட காவல் துறை அதிகாரிகளுக்கு 2020ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்களை வழங்கிட, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

1. ஜி.நாகஜோதி
காவல் துணை ஆணையர்,
மத்திய குற்றப்பிரிவு,
சென்னை பெருநகர காவல், சென்னை மாநகரம்.

2. இரா.குமரேசன்,
காவல் துணை கண்காணிப்பாளர்,
“கியூ” பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை,
சென்னை.

3. தி.சரவணன்,
காவல் உதவி ஆணையர்,
வடக்கு சரகம்(குற்றம்),
சேலம் மாநகரம்.

4. எஸ்.கே.துரை பாண்டியன்,
காவல் துணை கண்காணிப்பாளர்,
காட்பாடி உட்கோட்டம்,
வேலூர் மாவட்டம்.

5. ஈ.இளங்கோவன் ஜென்னிங்ஸ்,
காவல் ஆய்வாளர்,
ஓருங்கிணைந்த குற்றப்பிரிவு,
குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை,
திருச்சி மாநகரம்.

6. பி.எஸ்.சித்ரா,
காவல் ஆய்வாளர்,
மாநகர குற்றப்பதிவேடுகள் கூடம் ,
திருச்சி மாநகரம்.

7. கா. நீலாதேவி,
காவல் ஆய்வாளர்,
மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடம்,
சிவகங்கை மாவட்டம்.

8. ச. பச்சையம்மாள்,
காவல் ஆய்வாளர்,
அரக்கோணம் இருப்புப்பாதை காவல் நிலையம்,
இருப்புப்பாதை காவல் சென்னை.

9. ப.உலகராணி,
காவல் ஆய்வாளர்,
குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை,
திருநெல்வேலி.

10. திருமதி பி.விஜயலட்சுமி,
காவல் ஆய்வாளர்,
அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு,
திருநெல்வேலி.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள்.

மேற்கண்ட விருதுகள், முதல்வரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.