வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
வட தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வட தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவடத்தின் ஹாரிசன் எஸ்டேட்டில் 3 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.
வடக்கு வங்கக்கடல் ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோரப் பகுதியில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்திலும்
மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவா, கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 17 ஆம் தேதி இரவு 11.30 மணிவரை கடல் உயர் அலை 2.5 முதல் 2.7 மீட்டர் வரை எழும்பக்கூடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...