ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடை விதித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்பு அளித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மனதார வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அதிமுக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பாக "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும்" என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்.' எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் அதிகாரிகளை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!

பாஜகவின் வலையில் அதிமுக மாட்டிக்கொண்டுள்ளது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சு

தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலைகள் அதிர்ச்சி தருமா? அதுவும் ரூ.18, ரூ.35 வரை!!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


