ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நதிகள் இணைப்பு: நீர் சக்தித் துறை அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதன் சாத்தியக் கூறுகள் குறித்து மத்திய நீர் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

News image
நதிகள் இணைப்பு: நீர் சக்தித் துறை அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை
Updated On :18 ஆகஸ்ட் 2020, 7:08 am

DIN

சென்னை: தமிழகத்தில் நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதன் சாத்தியக் கூறுகள் குறித்து மத்திய நீர் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் தமிழக முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்பாசன திட்டங்கள் மற்றும் குடிநீர் திட்டங்கள் குறித்தும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் கலந்துரையாடினார்.

மேலும், தமிழகத்தில் நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதன் சாத்தியக் கூறுகள், காவிரி - கோதாவரி நதிகளை இணைப்பது தொடர்பாகவும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் க. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.