ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கரோனா வந்தால் அச்சப்பட வேண்டாம்: முதல்வர் பழனிசாமி

உரிய சிகிச்சைகள் அளிப்படுவதால் கரோனாவுக்கு ஆளாகும் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News image
கரோனா வந்தால் அச்சப்பட வேண்டாம்: முதல்வர் பழனிசாமி
Updated On :27 ஆகஸ்ட் 2020, 7:23 am

DIN


கடலூர்: உரிய சிகிச்சைகள் அளிப்படுவதால் கரோனாவுக்கு ஆளாகும் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள், வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று காலை கடலூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வருகை தந்தார்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக முதல் தளத்தில் உள்ள கூட்டரங்கில் கரோனா தடுப்புப் பணிகள், மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மாவட்டத்திலுள்ள விவசாய சங்கப் பிரதிநிதிகள், சிறு-குறு வா்த்தகா்கள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்களுடன் கலந்தாய்வு நடத்துகிறார். இதைத் தொடா்ந்து செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது, கரோனா நோய்ப் பரவல் படிப்படியாக குறையக் கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளோம். கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 8 ஆயிரத்துக்கும் அதிகமான காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 39 நடமாடும் மருத்துவக் குழுக்கள் செயல்படுகின்றன.

தமிழகத்தில் உரிய சிகிச்சைகள் அளிப்படுவதால் கரோனாவுக்கு ஆளாகும் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என்று முதல்வர் தெரிவித்தார்.

மேலும், கடலூர் மாவட்டத்தில்தான் அதிகளவில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.