ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நீதியரசர் ஏ.ஆர். லெட்சுமணன் மறைவு: முதல்வர் பழனிசாமி இரங்கல்

ஏ.ஆர். லெட்சுமணன்(78) உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

News image
நீதியரசர் ஏ.ஆர். லெட்சுமணன் மறைவு: முதல்வர் பழனிசாமி இரங்கல்
Updated On :27 ஆகஸ்ட் 2020, 9:48 am

DIN


சென்னை: உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியான முதல் தமிழரும், முன்னாள் நீதியரசருமான ஏ.ஆர். லெட்சுமணன்(78) உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் பழனிசாமி கூறியிருப்பதாவது, 

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஏ.ஆர் லட்சுமணன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர், 26.8.2020 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

நீதியரசர் ஏ.ஆர் லட்சுமணன் அவர்கள் தலைசிறந்த வழக்கறிஞர். இவர் தனது திறமையான வாதத்தால் பல வழக்குகளில் வெற்றி கண்ட பெருமைக்குரியவர். அவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் திறம்பட பணியாற்றியவர். 

பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் என்ற பெருமைக்குரியவர். குறிப்பாக, பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை விதித்து தீர்ப்பளித்தவர். சென்னை பார் கவுன்சில் செயலாளராகவும், தேசிய சட்ட ஆணையத்தின் தலைவராகவும் திறம்பட பணியாற்றியவர். 

உச்ச நீதிமன்றத்தால் முல்லைப் பெரியாறு ஆய்வுக்குழுவில் நியமிக்கப்பட்டவர். நீதியரசர் ஏ.ஆர் லட்சுமணன் அவர்கள், தனது கடின உழைப்பாலும், திறமையான வாதத்தாலும், நீதித்துறையில் தனி முத்திரை பதித்தவர். இவர் பல நூல்களையும் எழுதிய பெருமைக்குரியவர். அன்னாரின் மறைவு தமிழ்நாட்டிற்கும், நீதித்துறைக்கும் பேரிழப்பாகும். நீதியரசர் ஏ.ஆர் லட்சுமணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நீதித்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் லெட்சுமணன் மனைவி மீனாட்சி ஆச்சி உடல்நலக்குறைவு காரணமாக காரைக்குடியில் காலமானார். அவரது உடல் தேவைக்கோட்டைக்கு எடுத்து வந்து நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏ.ஆர்.லெட்சுமணன் வியாழக்கிழமை (ஆக.27) அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவரது இறுதி சடங்குகள் தேவகோட்டையில் நடைபெற உள்ளது. 

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியான முதல் தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு ஏ.ஆர்.எல். அருணாச்சலம், ஏ.ஆர்.எல். சுந்தரேசன் என இரு மகன்களும், உமையாள், சொர்ணவள்ளி என இரு மகள்களும் உள்ளனர். இவர்களில் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞராகவும், சென்னை பார் அசோசியேசன் தலைவராகவும் இருந்து வருகிறார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.