திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

உளுந்தூர்பேட்டை அருகே டாஸ்மாக் ஊழியர்களை கத்தியால் தாக்கி ரூ. 2 லட்சம் பறிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே டாஸ்மாக் ஊழியர்களை மர்ம நபர்கள் சிலர் கத்தியால் தாக்கி 2 லட்சம் ரூபாய் பறித்துள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :28 ஆகஸ்ட் 2020, 6:12 am

DIN

உளுந்தூர்பேட்டை அருகே டாஸ்மாக் ஊழியர்களை மர்ம நபர்கள் சிலர் கத்தியால் தாக்கி 2 லட்சம் ரூபாயை பறித்துள்ளனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளர்கள் வாசுதேவன், சந்திரசேகர் ஆகியோர் வியாழக்கிழமை இரவு விற்பனையை முடித்து கடையை மூடிவிட்டு வெளியே வந்தனர்.

அப்போது மது வாங்குவதைப் போல் வந்த மர்ம நபர்கள் இருவர், விற்பனையாளர் கண்ணில் மிளகாய் பொடி தூவி, கழுத்தில் கத்தியால் வெட்டி அவர்களிடம் இருந்த ரூபாய் இரண்டு லட்சம் பணத்தை பறித்துச் சென்றனர். அவர்களை பிடிக்கச் சென்ற சக்திவேல் என்பவரையும், அவர்கள் குத்திவிட்டு தப்பினர். காயமடைந்த விற்பனையாளர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.