ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கூட்டணி தலைமைப் பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு: முதல்வர் 

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் யார் தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.

News image
கூட்டணி தலைமைப் பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு
Updated On :28 ஆகஸ்ட் 2020, 7:56 am

DIN


சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தலைமை பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்  முதல்வர். அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்குஅ வர் பதிலளித்தார்.

நீட் தேர்வு குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கடந்த ஜூன் மாதமே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று பதிலளித்தார்.

கூட்டணிக்கு யார் தலைமை என்பதை பாஜக தான் முடிவு செய்யும் என்ற அக்கட்சியின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, தேர்தல் வரும் போதுதான் கூட்டணி பற்றியும் யார் தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்பது பற்றியும் முடிவு செய்யப்படும் என்று பழனிசாமி பதிலளித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.