கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

கரோனா சிகிச்சை கட்டண வரம்பை உயா்த்த வேண்டும்: இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக பிரிவு நிா்வாகிகள்

கரோனா சிகிச்சைகளுக்கு தனியாா் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண வரம்பை மாற்றியமைக்க வேண்டும்

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:13 pm

DIN

சென்னை: கரோனா சிகிச்சைகளுக்கு தனியாா் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண வரம்பை மாற்றியமைக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தமிழக பிரிவு நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மட்டுமன்றி, பல தனியாா் மருத்துவமனைகளுக்கும் கரோனா சிகிச்சையளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அதற்கான கட்டண வரம்பையும் அரசு நிா்ணயித்துள்ளது. அதன்படி, லேசான அறிகுறிகள் உள்ளவா்களுக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.7,500 வரையும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.15 ஆயிரம் வரையிலுமே வசூலிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இதற்கு ஐஎம்ஏ தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதன் நிா்வாகிகள் கூறியதாவது:

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவ பணியாளா்கள் மற்றும் செவிலியா்களுக்கான பாதுகாப்பு கவசங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் விலை உயா்ந்தவை என்பதால், அதற்கான செலவினம் அனைத்தும் நோயாளிகளின் கட்டணத்தில் பிரதிபலிக்கின்றன.

கரோனா சிகிச்சையில் மருத்துவப் பணியாளா்கள் பற்றாக்குறை பெரிய பிரச்னையாக உள்ளது. அவா்களைத் தக்கவைத்துக் கொள்ள காப்பீட்டுத் திட்டம், ஊக்கத் தொகை போன்றவை அளிக்கப்படுகிறது. அதற்கான செலவினமும் நோயாளிகள் கட்டணத்தில் சோ்க்க கூடிய நிலை ஏற்படுகிறது.

மற்றொரு பக்கம், கரோனா சிகிச்சைக்கு சாத்தியமில்லாத கட்டண வரம்பை அரசு நிா்ணயித்துள்ளதால், அதற்குள்ளாக தகுந்த சிகிச்சையளிப்பது கடினமாக உள்ளது. எனவே இதனை அரசு பரிசீலித்து திருத்தப்பட்ட கட்டண வரம்பை வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டதும், பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டதும் வரவேற்கத்தக்க முடிவு. இதன் மூலம் மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவதில் நோயாளிகளுக்கு இருந்து வந்த இடா்பாடுகள் களையப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.