எழுத்தாளர் தேவகோட்டை வா.மூர்த்தி (74) இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணி அளவில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
எழுத்தாளரான வா. மூர்த்தி தமிழகத்தில் வருமான வரி ஆணையராக பதவி வகித்து ஓய்வு பெற்றவர். முற்போக்கு சிந்தனை, ஆழ்ந்த படிப்பு, ஆங்கில நாளேடுகளிலும், தமிழ் இதழ்களிலும் கலை, இலக்கியம் பற்றிய கட்டுரைகள் எழுதியவர். தீபம், கணையாழி, ஞானரதம் முதற்கொண்டு தளம் இதழ் வரையும் இவரது படைப்புகள் வந்தன.
அர்த்தம் இயங்கும் தளம் எனும் கருத்தாக்க நூல், குறுநாவல் தொகுப்பு, சிறுகதைகள், மொழியாக்க கவிதைகள் என பரந்துபட்ட இலக்கிய படைப்புலகில் அயராது இயங்கியவர்.
கூர்மையான இலக்கிய விமர்சகர், இலக்கிய கடிதங்கள், தீபத்திலும், இறுதியாக யுகமாயினி இதழிலும் இலக்கிய தொடர்கள் எழுதியவர். தளம் கலை இலக்கிய இதழின் குழுவில் முதன்மையானவர். அவருடைய வாழ்க்கைத் துணைவர் சுதா மூர்த்தி (வங்கி அலுவலர்), ஒரே மகனும் எழுத்தாளருமாகிய பிரபு ராம், பேரக்குழந்தைகள் உள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் லேக் வியூ சாலை 5வது குறுக்கு தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை 3-4 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறும்.
தொடர்பு எண் 9790983495, 9444268328
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்! 400 பேர் பலி!!

மேஷ ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

தோ்தலில் அசம்பாவிதங்களைத் தவிா்த்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தல்

சென்ட்ரலில் ரூ.12.49 லட்சம் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

