தமிழகத்தில் புதிதாக 5,956 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 5,956 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் புதிதாக 5,956 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பொன்றை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 5,956 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் 5,925, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 31. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 1,150 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,28,041 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய செய்திக் குறிப்பில், மேலும் 91 பேர் (அரசு மருத்துவமனை -56, தனியார் மருத்துவமனை -35) உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,322 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 6,008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,68,141 பேர் குணமடைந்துள்ளனர். 52,578 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரேநாளில் 75,100 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 48,13,147 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
கரோனா பரிசோதனைக்காக மேலும் ஒரு தனியார் ஆய்வகத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அரசு ஆய்வகங்கள் 63, தனியார் ஆய்வகங்கள் 87 என மொத்தம் 150 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...