/

சென்னையில் 88% பேர் கரோனாவில் இருந்து குணமடைந்தனர்

சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் 88% பேர் குணமடைந்துள்ளனர். 13,472 பேர் அதாவது 10% பேர் சிகிச்சையில் உள்ளனர்.

News image
சென்னையில் 88% பேர் கரோனாவில் இருந்து குணமடைந்தனர்
Updated On :27 ஜனவரி 2024, 5:13 pm

DIN


சென்னை: சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் 88% பேர் குணமடைந்துள்ளனர். 13,472 பேர் அதாவது 10% பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சென்னை மாநகராட்சி புள்ளி விவரங்களோடு தகவலை வெளியிட்டுள்ளது.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி, சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,34,436 ஆக உள்ளது. இவர்களில் 1,18,235 பேர் குணமடைந்துள்ளனர். 2,729 பேர் உயிரிழந்துவிட்டனர். 13,472 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அண்ணாநகரில் 1,572 பேரும், கோடம்பாக்கத்தில் 1487 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

இதைத் தவிர, அடையாறு, திருவிக நகர், அம்பத்தூர் ஆகிய மூன்று மண்டலங்களில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் உள்ளனர். மற்ற மண்டலங்களில் கரோன நோயாளிகளின் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையிலேயே கோடம்பாக்கத்தில் 13,571 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தேனாம்பேட்டையில் 386 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.