அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 4,144 கன அடியாக அதிகரித்துள்ளது.

News image
மேட்டூர் அணை
Updated On :31 ஆகஸ்ட் 2020, 4:48 am

DIN

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாத காரணத்தால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டது.
இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வந்தது.

நேற்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,839 கன அடியாக சரிந்தது. இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,144 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 700 கன அடியிலிருந்து 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 91.70 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 90.71 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 53.46 டி.எம்.சியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.