கொள்ளிடம் பகுதியில் மழை வெள்ளம்: மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் நேரில் ஆய்வு

கொள்ளிடம் பகுதியில் மழை வெள்ளம் காரணமாக குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளத்தை வெளியேற்றவும், மக்களை பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கும் பணியில் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நா
கொள்ளிடம் பகுதியில் மழை வெள்ளம் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் நேரில் ஆய்வு
கொள்ளிடம் பகுதியில் மழை வெள்ளம் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் நேரில் ஆய்வு


சீர்காழி:  கொள்ளிடம் பகுதியில் மழை வெள்ளம் காரணமாக குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளத்தை வெளியேற்றவும், மக்களை பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கும் பணியில் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன் ஈடுபட்டாா்.

சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியில் தொடர்ந்து 3வது நாளாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள் நெல் வயல்களில் தண்ணீர் சூழ்ந்தது. 

நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக 36 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் கொள்ளிடத்தில் உள்ள தைக்கால், புத்தூர், தாண்டவன்குளம், ஆச்சாள்புரம், நல்லூர் , நடுத்திட்டு, கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.

இதனை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் விஜிகே. செந்தில்நாதன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கவும், தண்ணீரை வடிய வைக்கவும் நடவடிக்கை எடுக்க  அறிவுறுத்தினார். ஆய்வின்போது கொள்ளிடம் அதிமுக செயலாளர் நற்குணன், முன்னாள் எம்எல்ஏ சக்தி மற்றும் அதிமுகவினர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com