பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

லோயர் கேம்பில் மின்சார உற்பத்தி குறைந்தது

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளதால் தேனி மாவட்டம் லோயர் கேம்பில் மின்சார உற்பத்தி குறைந்தது.

News image
லோயர் கேம்பில் மின்சார உற்பத்தி குறைந்தது
Updated On :27 ஜனவரி 2024, 6:02 pm

DIN

கம்பம்: முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளதால் தேனி மாவட்டம் லோயர் கேம்பில் மின்சார உற்பத்தி குறைந்தது.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர் கேம்பில் 4 மின்னாக்கிகள் மூலம் மின்சார உற்பத்தி நடைபெறுகிறது. நான்கு மின்னாக்கிகளும் இயங்கினால் தலா 42 மெகாவாட் என மொத்தம் 168 மெகாவாட் உற்பத்தி கிடைக்கும்.

தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. வினாடிக்கு 431 கன அடி தண்ணீர் மட்டுமே அணைக்குள் தற்போது வருகிறது. மேலும் அணையிலிருந்து வினாடிக்கு 1355 கன அடி தண்ணீர் மட்டுமே தமிழக பகுதிக்கு திறந்து விடப்படுகிறது.

கடந்த நவ. 20-இல் நான்கு மின்னாக்கிகள் மூலம் 136 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறைவால் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 122 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி நடைபெற்றது.

இது பற்றி மின்சார வாரிய பொறியாளர் ஒருவர் கூறும்போது, நான்கு மின்னாக்கிகளில் தற்போது மூன்று மட்டுமே செயல்படுகிறது. முதல் அலகில், 38 மெகாவாட் இரண்டாவது அலகில் 42,  3வது அலகில், 42 என மொத்தம், 122 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெறுகிறது.

அணையிலிருந்து நீர் அதிகமாக வெளியேற்றப்பட்டால் மின்சார உற்பத்தியும் அதிகரிக்கும் என்றார்.

அணை நிலவரம்
வெள்ளிக்கிழமை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124. 40 அடி உயரமாக இருந்தது, அணையில் நீர் இருப்பு 3,499 மில்லியன் கன அடியாக இருந்தது.

 அணைக்குள் நீர்வரத்து வினாடிக்கு 431 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1,355 கன அடியாகவும் இருந்தது.  பெரியாறு அணைப்பகுதியில் 1.6 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 2.4 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.