ஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

தமிழகத்தில் புதிதாக 1,366 பேருக்கு கரோனா

தமிழகத்தில்  புதிதாக 1,366 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து 23-வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :5 டிசம்பர் 2020, 2:25 pm

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,366 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 23-வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் புதிதாக 1,366 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.88 லட்சமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 10,882 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 15 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,777-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றிலிருந்து புதிதாக 1,407 பேர் குணமடைந்ததால், மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 7,66,261-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் புதிதாக 353 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,17,204-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 3,336 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2,09,997 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 3,871-ஆக அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.