ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சென்னை குடிசைவாசிகளுக்கு டிச.13 வரை இலவச உணவு: முதல்வர் பழனிசாமி

சென்னை குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நாளை முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை இலவச உணவு வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News image
சென்னை குடிசைவாசிகளுக்கு டிச.13 வரை இலவச உணவு: முதல்வர் பழனிசாமி
Updated On :5 டிசம்பர் 2020, 10:49 am

DIN


சென்னை: புரெவி புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நாளை முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை இலவச உணவு வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதல்வரின் உத்தரவுப்படி, சென்னையில் சுமார் 5.3 லட்சம் குடும்பங்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் நிலையில், மொத்தம் 26 லட்சம் மக்களுக்கு நாளை முதல் இலவச உணவளிக்க சென்னை மாநகராட்சி ஏற்பாடுகளை செய்து வருகிறது.

நாளை காலை உணவு தொடங்கி, டிசம்பர் 13-ம் தேதி இரவு வரை குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நாள்தோறும் மூன்று வேலையும் இலவசமாக உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சமுதாய நலக் கூடங்கள், அம்மா உணவகங்கள் மூலம், குடிசைப் பகுதி மக்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கவிருக்கிறது சென்னை மாநகராட்சி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.