பாபர் மசூதி இடிப்பு தினம்: மேலப்பாளையத்தில் கடைகள் அடைப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மேலப்பாளையம், பேட்டை பகுதிகளில் கடைகள் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டன. 500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களும் இயங்கவில்லை.
மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டிருந்த கடைகள்.
மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

திருநெல்வேலி: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மேலப்பாளையம், பேட்டை பகுதிகளில் கடைகள் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டன. 500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களும் இயங்கவில்லை.

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. ஆண்டுதோறும் அந்த நாளில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

மேலப்பாளையத்தில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டன. நேதாஜி சாலை, வி.எஸ்.டி. பள்ளிவாசல் சாலை, கொட்டிக்குளம் கடைவீதி, பஜார் திடல் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் மட்டும் செயல்பட்டன.

மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

மேலப்பாளையம் பேருந்து நிலையம், வி.எஸ்.டி. பள்ளிவாசல், பஜார்திடல், பேட்டை பகுதிகளில் உள்ள ஆட்டோ நிறுத்தங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படவில்லை.

முன்னதாக பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மாநகர பகுதிகளில் 600 போலீஸார் கூடுதலாக பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் வெள்ளிக்கிழமையும் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன. 

மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com