புதுவையில் கரோனா பலி எண்ணிக்கை 615 ஆக உயர்வு
புதுச்சேரியில் புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் ஒருவர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
புதுச்சேரியில் புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் ஒருவர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து இதுவரை மாநிலத்தில் மொத்த பாதிப்பு 37,270 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,651 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார மற்றும் குடும்ப நல இயக்குநர் எஸ் மோகன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
70 வயதான ஒருவர் அரசு மருத்துவமனையில் பலியானதைத் தொடர்ந்து தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 615 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டதாக அவர் கூறினார். இறப்பு மற்றும் மீட்பு விகிதங்கள் 1.65 ஆகவும், 97.30 ஆகவும் உள்ளது.
இதுவரை புதுவையில் 4.21 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டதில் 3.79 லட்சம் மாதிரிகள் எதிர்மறையானவை ஆகும்.
தற்போது தொற்று பாதித்து 392 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 36,263 பேர் நோயிலிருந்து குணமடைந்து வெளியேற்றப்பட்டனர் என்று மோகன் குமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...