ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பொதுவேலை நிறுத்தம்: ஈரோட்டில் கடைகள் திறந்திருந்தன  

பொதுவேலை நிறுத்தத்திற்கு ஈரோடு மாவட்டத்தில் ஆதரவில்லை. கடைகள் திறந்திருந்தன, பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. 

News image
பொதுவேலை நிறுத்தம்: ஈரோட்டில் கடைகள் திறந்திருந்தன
Updated On :8 டிசம்பர் 2020, 6:57 am

DIN

                    
ஈரோடு: பொதுவேலை நிறுத்தத்திற்கு ஈரோடு மாவட்டத்தில் ஆதரவில்லை. கடைகள் திறந்திருந்தன, பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. 

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில்  பொது வேலை நிறுத்தத்திற்கு (பாரத் பந்த்)- க்கு  விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. இந்தப் பொதுவேலை நிறுத்தத்திற்கு எதிர்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பொதுவேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யூ.சி. உட்பட 10 -க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதைப் போன்று சில விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. மாநகர் பகுதியில் பெரும்பாலான கடைகள் வழக்கம் போல் இயங்கின. ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி சந்தை இயங்கவில்லை.  இங்கு 800-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள், 160-க்கும் மேற்பட்ட பழக் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் சந்தை பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Story image

மாநகர் பகுதியில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) செயல்பட்டது. ஆனால் வெளிமாநில வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். மேலும் பொதுமக்கள் கூட்டம் இல்லாமல் ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் பன்னீர்செல்வம் பூங்கா, ஈஸ்வரன் கோவில் வீதி ,கொங்காலம்மன் வீதி,ஆர்.கே.வி சாலை போன்ற பகுதி மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் காவலர்கள் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், மத்திய அரசு அலுவலகங்களில் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.