திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மருத்துவக் கலந்தாய்வில் போலிச் சான்றிதழ்: மாணவி, தந்தை மீது வழக்குப்பதிவு

மருத்துவக் கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்த மாணவி, மற்றும் அவரது தந்தை மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :13 டிசம்பர் 2020, 5:45 am

DIN

மருத்துவக் கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்த மாணவி, மற்றும் அவரது தந்தை மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

பரமக்குடியைச் சேர்ந்த தீக்ஷா என்ற மாணவி நடந்து முடிந்த மருத்துக் கலந்தாய்வில் கலந்துகொண்டார். அவர் நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் பெற்றிருந்ததாக சான்றிதழ் அளித்திருந்தார்.

ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பில் அவரது கலந்தாய்வு அழைப்புக் கடிதம், சான்றிதழ் உள்ளிட்டவற்றை சோதனை செய்ததில் அவர் போலிச் சான்றிதழ் அளித்தது தெரியவந்தது. 

நீட் தேர்வில் அவர் 27 மதிப்பெண்கள் மட்டுமே போட்டிருந்தார். அவரது தந்தை பாலச்சந்திரன், பல் மருத்துவராக இருக்கிறார். 

இதையடுத்து அதிகாரிகள் காவல்துறையில் புகார் கொடுக்கவே, பெரியமேடு காவல்துறையினர் மாணவி தீக்ஷா மற்றும் அவரது தந்தை பாலச்சந்திரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.