கம்பத்தில் ஜமாத் கமிட்டியினர் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் கம்பத்தில் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.


தேனி மாவட்டம் கம்பத்தில் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தேனி மாவட்டம் கம்பத்தில் அனைத்து ஜமாத் கமிட்டியினர் சார்பில் வடக்கு காவல் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வாவேர் பள்ளி வாசல் ஜமாத் தலைவர் பாபா பக்ருதீன் தலைமை தாங்கினார். அலாவுதீன் மிஸ்பாகி, சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி, மே 17 இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் ஆகியோர் மத்திய அரசைக் கண்டித்துப் பேசினர்
ஆர்ப்பாட்டத்தில் வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்துசெய், சுற்றுச்சூழல் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறவேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். இதேபோல் வேளாண் சட்டத்தை திரும்ப கோரி வி.சி.க கட்சி சார்பில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்கை முற்றுகையிட்டு மாவட்டச் செயலாளர் சுருளி தலைமையில் நகரச் செயலாளர் மோகன் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...