‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

பெரியபாளையத்தில் தனியார் நிறுவனத்தை எதிர்த்து போராட்டம்: தொழிலாளர்கள் 100 பேர் கைது

பெரியபாளையம் அருகே ஹிந்துஸ்தான் யுனிலிவர் தனியார் நிறுவனத்தை குடும்பத்தினருடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடமுயன்ற 100 மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்

Updated On :

பெரியபாளையம் அருகே ஹிந்துஸ்தான் யுனிலிவர் தனியார் நிறுவனத்தை குடும்பத்தினருடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடமுயன்ற 100 மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள மதுரவாசலில்   ஹிந்துஸ்தான் யூனிலிவர்  நிறுவனத்திற்குச் சொந்தமான லின்பாக்ஸ் லாஜிஸ்டிக் தனியார் நிறுவனத்தில் சோப்பு, டீத்தூள், உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வினியோகம் செய்யும் பணியில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில்
அவர்களை உரிய காரணம் இன்றி பணி நீக்கம் செய்ததால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இரண்டாவது முறையாக தங்களது  குடும்பத்தினருடன் வந்து நிறுவன வாயிலை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ஹிந்துஸ்தான் லிவர் பொருள்களை புறக்கணிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தினர்.

பின்னர் தகவலறிந்து வந்த பெரியபாளையம் காவல்துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்த உரிய அனுமதி இல்லை என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 மேற்பட்ட  தொழிலாளர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.