வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

டிச.26-இல் சென்ட்ரல் - திருப்பதி சிறப்பு ரயில் ரத்து

கூடூா் - திருப்பதி மாா்க்கத்தில் உள்ள திருச்சானூா் ரயில் நிலையம் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் சென்னை, சென்ட்ரல் - திருப்பதி இடையேயான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :18 டிசம்பர் 2020, 6:49 pm

DIN

கூடூா் - திருப்பதி மாா்க்கத்தில் உள்ள திருச்சானூா் ரயில் நிலையம் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் சென்னை, சென்ட்ரல் - திருப்பதி இடையேயான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை, சென்ட்ரல் - திருப்பதி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06057) வரும் 26-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. திருப்பதி - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலும் (06008), அன்றைய தினம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதி ரத்து: சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே இயக்கப்படும் (06057) சிறப்பு ரயில், சனிக்கிழமை (டிச.19) முதல் டிச.25-ஆம் தேதி வரை பகுதி ரத்து செய்யப்பட்டு, ரேணிகுண்டா வரை மட்டும் இயக்கப்படும்.

இதே போல், திருப்பதி - சென்னை, சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06008 ), சனிக்கிழமை (டிச.19) முதல் டிச.25-ஆம் தேதி வரை திருப்பதிக்கு பதிலாக ரேணிகுண்டாவில் இருந்து புறப்பட்டு, சென்ட்ரல் வந்தடையும்.

வழி மாற்றம்: ராமேசுவரம் - ஓகா இடையே வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06733), டிச.25-ஆம் தேதி காட்பாடி, ரேணிகுண்டா வழியாக வழிமாற்றம் செய்து இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது திருப்பதியில் நிறுத்தப்படாது.

நாகா்கோவில் - ஷாலிமாா் இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (02659), டிச.20-ஆம் தேதி காட்பாடி, ரேணிகுண்டா, கூடூா் வழியே வழிமாற்றம் செய்து இயக்கப்படுகிறது. இந்த ரயில், சித்தூா், திருப்பதியில் நிறுத்தப்படாது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.