தமிழக மக்கள் அனைவருமே முதல்வர்கள்தான்: முதல்வர் பழனிசாமி 

நான் மட்டும் முதல்வர் அல்ல, தமிழக மக்கள் அனைவருமே முதல்வர்கள்தான் என சேலத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார். 
சேலம் முத்துநாயக்கன்பட்டி பகுதியில் முதல்வர் அம்மா மினி கிளினிக்கை துவக்கி வைத்த முதல்வர் பழனிசாமி
சேலம் முத்துநாயக்கன்பட்டி பகுதியில் முதல்வர் அம்மா மினி கிளினிக்கை துவக்கி வைத்த முதல்வர் பழனிசாமி

நான் மட்டும் முதல்வர் அல்ல, தமிழக மக்கள் அனைவருமே முதல்வர்கள்தான் என சேலத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார். 

சேலம் மாவட்டம் சேலம் மேற்கு சட்டபேரவைத் தொகுதி முத்துநாயக்கன்பட்டி பகுதியில் அம்மா மினி கிளினிக்கை துவக்கி வைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது: மக்கள் எல்லோரும் அனைத்து இடங்களிலும் அம்மா மினி கிளினிக் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு தங்கள் பகுதிகளில் உள்ள மினி கிளினினிக்கை பயன்படுத்தலாம், ஒரு மருத்துவர், செவிலியர்,உதவியாளர் என மூன்று பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

காலை 8 மணி முதல் மதியம் 12 வரையிலும் மாலை 4 முதல் இரவு 7 மணி வரை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் முதலமைச்சர் அம்மா கிளினிக்கை பயன்படுத்தலாம். இங்கு அனைத்து சிகிச்சைகளுக்கும் மருத்துவம் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அருமையான திட்டத்தை அம்மா அரசு செயல்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் மட்டும் 100 அம்மா மினி கிளினிக்குகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக லத்துவாடி கொண்டலாம்பட்டி வாணியம்பாடி ஆகிய நான்கு பகுதிகளில் இந்த மூன்று நாட்களில் துவங்கப்பட்டுள்ளது. மீதி உள்ள இடங்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேரடியாகச் சென்று துவக்கி வைப்பார்கள்.

மக்களுக்கு எளிதாக சேவை செய்யும் வகையில் இந்த மினி கிளினிக் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆணைக்கிணங்க அவர்கள் அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் தற்போது அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் ஊட்டச்சத்து வழங்க தாய்சேய் நலப் பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது .

குழந்தைகள் பிறப்பை உத்தரவாதப்படுத்தியும் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் அரசு முழுமூச்சுடன் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கான மருத்துவமனைகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்தும் அரசாக உள்ளது.

சேலம் மாவட்டம் முதல்வர் மாவட்டம் என பெருமை பெற்றுள்ளது சேலத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் எளிதில் சென்று வரும் வகையில் நான் இருக்கிறேன். அன்று பழனிசாமி எப்படி இருந்தேனோ தற்போது முதல்வராக இருக்கும் போதும் அதே பழனிசாமியாகதான் இருக்கிறேன்.

முதல்வராக இருக்கும்போது நான் மாறவில்லை. மக்கள் பணி உயர்ந்த பணி என மக்களுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறேன். மக்கள் நினைக்கும் திட்டங்களை எளிதில் நிறைவேற்றக்கூடிய முதல்வராக நான் இருக்கிறேன். 

கிராம மக்கள் நகரத்தில் இருப்பவர்கள் போன்று அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்கும் வகையில் அம்மா மினி கிளினிக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து ஏழை எளிய மாணவர்களின் கனவை நினைவாக்க சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார், அந்த அனுபவத்தில் இருந்து வந்த நாங்கள் மக்களின் நலனுக்காக தேவைப்படும் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வகையில் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 41 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவர்கள் கனவை நினைவாக்கும் வகையில் பல்வேறு மருத்துவத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது .

விவசாயிகள் விவசாயத் தொழிலாளிகள் நாட்டு மக்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் உழைக்கிறார்கள் அப்படி உள்ள விவசாய குடும்பத்தை சார்ந்த பிள்ளைகள் மருத்துவம்  கற்கும் வகையில் ஒதுக்கீடுகள் 7.5% உள் இட ஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது 313 இடங்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்து படிக்க அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்துள்ளது அடுத்த ஆண்டு 435 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பதால் 1650 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும்

 கிராமத்தில் வாழ்ந்த ஒரு மாணவர் மருத்துவரானால் அந்த கிராமத்திற்கு கண்டிப்பாக உதவுவார். கிராமத்தில் பணியாற்றுவார் எனவும் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் மேல்நிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும்  தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாயம் காக்கப்பட வேண்டிய பல்வேறு ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு உபரி நீரை சேமிக்கும் பூலாவரி திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.

சரபங்கா நதியின் குறுக்கே பாலம் மக்களின் கோரிக்கையை ஏற்று கட்டப்பட்டுள்ளது. 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து வசதி பெற்றுள்ளனர்.

வேளாண்மைத் துறையை மேம்படுத்தும் வகையில் விவசாயிகளை பாதுகாக்க பூச்சிக்கொல்லி மருந்துகள் மானிய விலையில் வழங்கப்பட்டு உள்ளது இதேபோல் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக விவசாயிகள் பாதுகாக்கப்படுகின்றனர். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப் படும் விவசாயிகளுக்கு  இழப்பீட்டு தொகை வழங்கும் அரசு அம்மாவின் அரசு.

இதுவரை 9 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்தி இதன் காரணமாக நீர் மேலாண்மை திட்டத்தில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. மத்திய அரசு அதற்கான சிறப்பு விருதை அளித்து உள்ளது.

மருத்துவ துறை மின்சாரத் துறை போக்குவரத்து உள்ளாட்சி துறை கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளது. சரியான திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மத்திய அரசு பல்வேறு விருதுகளை வழங்கி உள்ளது எனவும் பெருமிதம் கொண்டார். எதிர்க்கட்சியினர் நல்ல திட்டங்களை பாராட்டி பேசாவிட்டாலும் அவதூறு பரப்ப கூடாது.

 தமிழகத்தில் மக்களின் கோரிக்கை அனைத்தையும் செய்யக்கூடிய அரசாக அதிமுக அரசு உள்ளது. மக்களின் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நான் தொடர்ந்து செயல்படுத்துவேன். எனவும் தமிழக மக்கள் அனைவரையும் முதல்வர் ஆகவே நான் பார்க்கிறேன் எனவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com